இந்தியன் 2 படப்பிடிப்பில் உயிரிழந்தோருக்கு கமல் அஞ்சலி கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தினார்
இந்தியன் -2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய கமல் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், என் குடும்பத்தில் நிகழ்ந்த விபத்தாக பார்க்கிறேன். இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரமிது. சினிமாவில் 100 கோடி , 200 கோடி என மார்தட்டிக் கொள்ளும் நாம் கடைநிலை ஊழியனுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை.
சினிமாவில் இது போன்ற இனி ஏற்பட கூடாது என்ற நிலை எய்த வேண்டும். கடைநிலை ஊழியருக்கு பாதுகாப்பு இல்லாதது அவமானமாகும். இரண்டு நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பில் இணைந்த கிருஷ்ணா இன்று உயிருடன் இல்லை. சினிமாவில் பாதுகாப்பு இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது . 4 நொடிகளுக்கு முன்பு வரை நான் அங்குதான் இருந்தேன். நான் நூலிழையில் உயிர் பிழைத்தேன் என்று கமல் தெரிவித்தார். இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கமல் 1 கோடி நிவாரணம் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.