பணம் என்பது தற்போது அவசியமான ஒன்றாகும். பணத்தை சம்பாதிப்பதை விட அதை எப்படி சேமிப்பது என்பதுதான் மிக முக்கியம். தற்போதைய காலத்தில் நிகழ்காலத்தில் அனைத்தையும் செலவு பண்ணிவிட்டு எதிர்காலத்தில் அவசர தேவைக்கு பணம் இல்லாத நிலை ஏற்படாமல் இருப்பதற்காக சேமிப்பு என்பது மிகவும் அவசியம். மேலும் கொரோனா வந்தபிறகு சேமிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை பலரும் புரிந்து கொண்டுள்ளனர். இதற்கு இந்திய தபால் துறை சிறப்பான சேமிப்பு திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறது.
அந்தவகையில் அரசு உத்தரவாதம் தபால் அலுவலக ரெக்கரிங்க் டெபாசிட் திட்டம் தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானத்தை கொடுக்கிறது. இத்திட்டத்தில் ரூ.100 முதல் முதலீடு செய்யலாம். இதில் 5.8% வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் முதலீட்டாளர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 முதலீடு செய்வதால் 10 வருடங்கள் மெச்சூரிட்டிக்கு பின் சுமார் ரூ.16 லட்சம் வருமானம் கிடைக்கும்.
இந்த திட்டத்தில் தொடர்ந்து எல்லா மாதங்களிலும் முதலீடு செய்யவேண்டும். ஏதேனும் ஒரு மாதம் முதலீடு செய்யாமல் விட்டு விட்டால் கூட 1 சதவீதம் அபராதம் செலுத்த நேரிடும். மேலும் நான்கு மாதங்கள் தொடர்ந்து முதலீடு செய்யாவிட்டால் கணக்கு தானாகவே மூடப்பட்டு விடும். ஒரு வருடத்திற்கு பின் அக்கவுண்டில் இருக்கும் பணத்தில் 50% எடுத்துக் கொள்ளலாம்.