நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்காக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்ட தேர்வு (என் எம் எம் எஸ்- National means cum merit scholarship scheme) ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
இந்த தேர்வுக்கு மாணவர்கள் அக்டோபர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் இந்த தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு படிக்கும் வரை மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.எனவே விருப்பமுள்ள மாணவர்கள் இதற்கு விண்ணப்பித்து பயனடையுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.