நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலை இழந்து தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு தவித்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக ராஜஸ்தானி ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.106.08-க்கும் விற்பனையாகிறது. மத்திய பிரதேச மாநிலத்தின் ரேவா மாவட்டத்தில் ரூ.101.25, டெல்லியில் ரூ.95.03, சென்னையில் ரூ.96.47, கொல்கத்தாவில் ரூ.95.02, பெங்களூருவில் ரூ.98.20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது.
Categories
ரூ.100-ஐ கடந்து செல்லும் பெட்ரோல் விலை….. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி….!!!!
