தெலுங்கானாவில் விக்டர் இம்மானுவேல் என்னும் மருத்துவர் ஒருவர் பத்து ரூபாய்க்கு கொரோனா சிகிச்சை அளித்து வருகிறார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பல மருத்துவமனைகளில் படுக்கைகள், சிகிச்சை மருத்துவர்கள், தடுப்பு ஊசி மற்றும் ஆக்ஸிஜனை தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் டாக்டர் இம்மானுவேல் ஆலோசனை கட்டணமாக 10 ரூபாய் மட்டும் வசூலிக்கிறார். கடந்த ஆண்டு முதல் இதுவரை தன்னிடம் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் நோயாளிகள் சிகிச்சை பெற்று உள்ளதாகவும்,500 நோயாளிகள் தங்கும் வகையில் சிறப்புப் கொரோனா சிகிச்சை மையத்தை தொடங்கி கண்காணித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுவரை நூற்றுக்கணக்கானோர் இவரது ஆலோசனையால் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் கோரோணா பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு மற்றும் மருத்துவமனை காட்டிலும் குறைவான கட்டணமே அவர் வசூலித்து வருகிறார். இவரின் இந்த சேவை பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.