Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ரூ. 1 1/4 லட்சத்துடன் நின்ற முதியவர்…. மர்ம நபர்கள் செய்த செயல்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் கிராமத்தில் விவசாயியான கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7- ஆம் தேதி வங்கியிலிருந்து 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாயை எடுத்து கொண்டு கிருஷ்ணசாமி பாலக்கரை பகுதியில் இருக்கும் கடையில் பொருட்கள் வாங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த 2 மர்ம நபர்கள் முதியவரிடமிருந்து பணத்தை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து கிருஷ்ணசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து 16 வயது சிறுவன் மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த தினேஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Categories

Tech |