இந்தியாவில் அந்நிய இணை வர்த்தக தலைமை இயக்குனராக சம்பாஜி ஏ சவான் என்பவர் இருக்கிறார். இதன் துணை தலைமை இயக்குனராக பிரகாஷ் எஸ். காம்ப்ளே என்பவர் இருக்கிறார். ராதா மாதவ் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு மூலதன இயந்திரங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இறக்குமதி மூலம் சேமிக்கப்படும் வரி விதிப்பில் 8 மடங்குக்கு சமமான தொகையை ஏற்றுமதி செய்ய வேண்டும். அதன்படி பார்த்தால் அந்த நிறுவனம் 16 கோடியை 81 லட்சம் வரி சேமித்துள்ளது. இதனால் 135 கோடிக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். ஆனால் வெறும் 17 கோடிக்கு மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது.
இன்னும் 118 கோடிக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். ஆனால் போலியான ஆவணங்கள் மூலம் அந்த நிறுவனம் 118 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்துள்ளதாக கணக்கு காண்பித்து விட்டது. இதற்கு அதிகாரிகள் சம்போஜி மற்றும் பிரகாஷ் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இதற்காக 2 பேரும் நிறுவனத்தின் உரிமையாளர் ரமேஷ் சவானிடம் 1 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு லஞ்சம் கைமாறிய நிலையில், தற்போது சிபிஐ அதிகாரிகள் 2 அதிகாரிகளின் மீதும் வழக்குபபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் டெல்லி, மும்பை, புனே, டாமன் ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.