Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரூல்ஸை மீறி 1,705 விளம்பர பலகைகள்…. சென்னை மாநகராட்சி எடுத்த அதிரடி நடவடிக்கை….!!!!

சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இருப்பதாவது, சென்னை மாநகராட்சி சார்பாக 200 வார்டுகளிலும் நேற்று தீவிர தூய்மைபணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள 1,705 விளம்பர பலகைகள் மற்றும் பேனர்கள் மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது. மேலும் தூய்மை பணிகளில் 171.28 டன் கழிவுகள், சாலை ஓரங்களில் கிடந்த தேவையற்ற இரும்பு ஆகியவையும் அகற்றப்பட்டது.

அதேபோன்று மாநகராட்சியும், தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து பெசன்ட்நகர் கடற்கரையில் “சுத்தமான கடற்கரை பாதுகாப்பான கடல்” என்ற கடலோர தூய்மை பணிக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இதன் வாயிலாக பெசன்ட்நகர் கடற்கரையில் 750 கிலோ திடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் “நமது குப்பை நமது பொறுப்பு” என்பதனை உணர்ந்து பொதுயிடங்களில் தேவையற்ற கழிவுகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும். அதேபோன்று விதிமுறைகளுக்கு மாறாக வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் மற்றும் பேனர்களை சம்பந்தப்பட்டவர்கள் தாமாகவே முன் வந்து அதை அகற்றவேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |