Categories
தேசிய செய்திகள்

ரூம் ரெண்ட் இல்லை…. EB இல்லை… ஆனா ஆபீஸ் இருக்கு… புதிய ஐடியாவில் கலக்கும் தம்பதி…!!!

கொரோனா காலத்தில் பலரின் வாழ்க்கை முடங்கி உள்ளது என்றாலும், பலருக்கு புதிய யோசனைகளை கொடுத்துள்ளது என்றால் அது மிகையாகாது. அதுபோல்தான் இந்த குஜராத் தம்பதியினர். என்ன செய்தார்கள்? எப்படி ஜெயித்தார்கள்? என்பது பற்றி இதில் பார்ப்போம்.
இந்த கொரோனா காலம் பலரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிட்டது. பலர் தங்களது பெற்றோர்கள், உறவினர்கள் என பலரின் இழந்துள்ளனர். அதேசமயம் சிலருக்கு புதிய யோசனைகள், திட்டங்கள் போன்றவைகளும் கை கூடியுள்ளது. அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் ஆனந்த் சதவ் ரதி, அவணி சதவ் ரதி தம்பதிகளுக்கு புதிய யோசனை கை கொடுத்துள்ளது.

அடிப்படையில் வழக்கறிஞரான ஆனந்த் மற்றும் அவரது குடும்பம் கொரோனாவால் பாதிக்கப்பட்டது. கொரோனாவால் எதுவும் திறக்கப்படாமல் இருந்ததால், வழக்கறிஞர் தொழில் செய்து வந்த ஆனந்த் பதினைந்து மாத காலமாக இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார். வழக்குகளும் இல்லை வாதாடவும் இல்லை. அப்போதுதான் ஆனந்துக்கு புதிய யோசனை தோன்றியது. தனது காரை அலுவலகமாக மாற்றும் அந்த யோசனை அவருக்கு கை கொடுத்தது. வருமானம் இல்லாததால் அலுவலகம் வைக்க முடியவில்லை. ஆனால் காரிலேயே அத்தனை வசதிகளையும் கொண்டு வந்தார். ஜெராக்ஸ், ஸ்கேனர், பிரிண்ட் அவுட், போட்டோ பிரிண்ட் அவுட், போட்டோ எடிட்டிங் என்று பல வசதிகளையும் உள்ளடக்கிய மொபைல் ஆபீசை தயார் செய்தார்.

ரூம் ரெண்ட் இல்லை, EB இல்லை ஆனால் ஆபீஸ் தயார். தனது கார் ஆபீஸ் இயங்குவதற்கு ஒரு சோலார் பேனலையும் பொருத்தி இருந்தார். எனது மனைவியுடன் கார் அலுவலகத்தில் நீதிமன்றத்திற்கு வந்துவிடும் ஆனந்த் நீதிமன்றத்தோடு, அலுவலகத்தையும் பார்த்துக்கொண்டார். இவர் நீதிமன்றத்திற்கும் செல்லும்பொழுது இவரது மனைவி அலுவலக வேலைகளை பார்த்துக் கொள்வார். அலுவலக வேலைகளை செய்வதற்கு ஆனந்த் தனது மனைவிக்கு முறையான பயிற்சியையும் கொடுத்துள்ளார். இரண்டு மகள்கள், மனைவி என குடும்பமாக வந்து அலுவலக பணிகளை மேற்கொள்ளும் ஆனந்த் சதவ் ரதி கொரோனாவை இப்படியும் வெல்லலாம் என்பதற்கு சான்றாக உள்ளார் என்று இப்பகுதி மக்கள் பாராட்டுகின்றனர்.

Categories

Tech |