நடிகை லைலா தற்போது தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் லைலா. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவந்த லைலா 2006ஆம் வருடம் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் அப்போது சினிமாவிலிருந்து விலகினார்.
இந்நிலையில் மீண்டும் லைலா ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கின்றார். முன்பாக இந்த வேடத்தில் நடிகை சிம்ரன் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு தேதி மாற்றம் செய்யப்பட்டதால் சிம்ரனுக்கு கால்ஷீட் கொடுக்க முடியாமல் போனதைத் தொடர்ந்து அந்த வேடத்தில் தற்போது லைலா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.