ரிஷபம் ராசி அன்பர்களே …! இன்று இடையூறு செய்பவர்களிடம் விலகி இருப்பது ரொம்ப நல்லது. தொழில் வியாபாரத்தில் பணிச்சுமை ஏற்படும். முக்கிய தேவைகளுக்கு சேமிப்பு பணம் பயன்படும். பொருட்களை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம். வெளியூர் பயணத் திட்டத்தில் மாறுதல்கள் செய்வீர்கள். இன்று சின்னச் சின்ன விரயங்கள் ஏற்பட்டாலும் அவையாவுமே சுப செலவுகள்தான். எனினும் பணவரவு திருப்திகரமாக இருப்பதால் சேமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள. உங்களுடைய தன்னம்பிக்கை திறமை திறன் அதிகரிக்கும்.
அரசு தொடர்பான பணியில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் ஓரளவு கைகூடும். இன்று நீங்கள் முக்கியமாகச் செய்யவேண்டியது யாருக்கும் ஜாமீன் கையெழுத்து எதுவும் போடக்கூடாது. மிக முக்கியமாக வாக்குறுதிகள் எதுவும் கொடுக்கக் கூடாது. பண பரிவர்த்தனையில் ரொம்ப கவனம் இருக்க வேண்டும். வாகனத்தில் செல்லும் போது ரொம்ப கவனமாக செல்ல வேண்டும். இன்று உங்களுக்கு சந்த்ரஷ்டமம் உள்ளதால் பொறுமையே மட்டும் கடைபிடியுங்கள்அது போதும்.
இறை வழிபாட்டுடன் இன்றைய காரியங்களைச் செய்யுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளைநிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று தமிழ் புத்தாண்டு என்பதால் விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். இந்த வருடம் முழுவதுமே உங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட திசை : 1 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்