ரிஷபம் ராசி அன்பர்கள்…!! பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து சேரும். புதிய வேலை வாய்ப்புகள் அமையும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவு கொடுப்பார்கள். வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். குடும்பத்தில் மட்டும் திடீரென குழப்பங்கள் வந்து செல்லும்.
கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் கொஞ்சம் ஏற்படலாம் எதையும் பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. பிள்ளைகள் மீது அக்கறை காட்டுவீர்கள் நண்பர்கள் உறவினர்கள் மூலம் நன்மை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளுவின் காரணமாக அலைய வேண்டி இருக்கும். மாணவச் செல்வங்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். இருந்தாலும் படித்த பாடத்தை ஒருமுறைக்கு இருமுறை எழுதிப் பாருங்கள் ரொம்ப சிறப்பாக இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்களின் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியம் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் ஊதா நிறம்