ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று இறை வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்குவீர்கள். பக்தி மிக்க நாளாகவே இன்று மாற்றிக்கொள்வீர்கள். புதிய திருப்பங்கள் ஏற்படும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். புகழ் ஓங்கி நிற்கும். அரசால் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள் இன்று சந்திக்கக்கூடும். குடும்பத்தோடு சென்று முக்கிய பணியை நிறைவேற்ற கூடும்.
நல்ல பலன்கள் உங்களுக்கு அமையக்கூடும். திறமையான பேச்சின் மூலம் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகிச் சென்று விடுவார்கள். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவும். அதிகாரிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். இன்று உங்களுக்கு தொட்டது துலங்கும் நாளாகவும் அமையும்.
இன்று முக்கியமான பணி நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு ஓரளவு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்களும் சிறப்பாக நடக்கும். உங்களுடைய மனம் அமைதியாக இருக்கும்.
அதிர்ஷ்ட திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறம்