Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு… எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள்… வீண் வாக்குவாதங்கள் வந்து சேரும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருடன் வீண் வாக்குவாதங்கள் வந்து செல்லும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் சரியாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள் தான் இன்றைய நாள் இருக்கும். இன்று எதை செய்வதாக இருந்தாலும் கூர்மை சிந்தனைத் திறனுடன் செய்யுங்கள் நன்றாகவே இருக்கும்.

நவீன முறைகளை கையாண்டு பயிர் விளைச்சலை விவசாயிகள் பெருக்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். முயற்சிகள் அனைத்தும் வெற்றியே கிட்டும். நீர் வரவு தாராளமாகவே இருக்கும். குடும்பத்தின் பொருளாதாரம் ஓரளவு சிறப்பை கொடுக்கும். அரசாங்கத்தால் இன்று ஆதாயம் பெறக்கூடும். இன்று கணவன் மனைவிக்கு இடையே அன்பு நீடிக்கும். உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரை எந்தவித பிரச்சனையும் இல்லை. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்புநிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் குரு பகவான் வழிபாட்டையும், சித்தர்களின் வழிபாட்டையும் மேற்கொள்வது ரொம்ப நல்லது.

அதிஷ்ட திசை: வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |