கடந்த 2009-ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் டைரக்டு செய்து ரிலீசான அவதார் திரைப்படமானது உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இப்போது அவதார் திரைப்படத்தின் 2ஆம் பாகம் தயாராகியுள்ளது.
இதற்கு அவதார்: தி வே ஆப் வாட்டர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற இந்திய மொழிகள் உட்பட 160 மொழிகளில் டிசம்பர் 16ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இப்படத்தின் முன்பதிவு அண்மையில் இந்தியாவில் துவங்கியது.
அதன்பின் வேகமாக டிக்கெட்டுகள் விற்பனையாகி இப்போது வரை ரூபாய்.10 கோடிக்கு மேலாக வசூலித்து உள்ளதாகக் தகவல் வெளியாகி இருக்கிறது. ரிலீசுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் முன்பதிவில் அவதார்: தி வே ஆப் வாட்டர் படம் சாதனை படைத்திருக்கிறது. அத்துடன் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகரித்து உள்ளது.