ஒரு கிராமத்தில் ஒரு அப்பாவி குருவி வாழ்ந்து வந்தது. மனதில் மாசற்ற இந்தக் குருவிக்கு காகங்களின் கூட்டம் ஒன்று அறிமுகமானது. காகங்கள் உடன் பழக வேண்டாம் என்று நண்பர்கள் பலர் எச்சரித்தும் கேட்காமல், அந்தக் காகங்கள் உடன் மனதார நட்பு பாராட்டியது குருவி. ஒருநாள் குருவியையும் அழைத்துக்கொண்டு காகங்கள் கூட்டமாக கிளம்பின. அவை எங்கே போகின்றன. என்ன செய்ய உள்ளன என்பதை கேட்காமல், கூப்பிட்ட உடனே அவர்களை நம்பி உடன் சென்றது குருவி.
நேராக பயிர்களும் செடிகளும் வளர்ந்துள்ள பண்ணைக்குச் சென்ற பார்க்க கூட்டம், எல்லாவற்றையும் சாப்பிட தொடங்கி அந்த இடத்தையே துவம்சம் செய்தன. இதைப் பார்த்து என்ன செய்வதென்றே புரியாமல் நின்று கொண்டிருந்தது அந்த அப்பாவி குருவி. காக்கைகளின் கூட்டத்தை கண்டு அங்கு ஓடிவந்து விவசாயிகள், குச்சிகளைக் கொண்டு அவற்றை அடித்து விரட்ட தொடங்கினார். உடனே காக்கைகளும் அந்த இடத்தைவிட்டு தப்பி பறந்தன.
ஆனால் என்ன செய்வது என்று புரியாமல் நின்றுகொண்டிருந்த குருவி விவசாயிடம் அகப்பட்டுக் கொண்டது. போ போ என் மேல் எந்த தவறும் இல்லை. நான் எந்தத் தப்பும் செய்யவில்லை, தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள் என்று குருவி கெஞ்சியது. ஆனால் பயிர்கள் நாசம் ஆனதால் கடும் கோபத்தில் இருந்த விவசாயின் குருவி சொன்னதை நம்பாமல் அதன்மீது இரண்டு அடி போட்டார். அப்போது உணர்ந்த வலியில் தனது தவறான நட்பை புரிந்து உணர்ந்து கொண்டது.
கதை நீதி:
உங்கள் நண்பர்கள் யார் என்பதை கொண்டே உங்களின் தகுதி மதிப்பிடப்படுகின்றது. நீங்கள் நல்லவராக இருந்தும், உங்கள் நண்பர்கள் மோசமானவர்களாக இருந்தால், உங்களையும் கெட்டவர் ஆகவே இந்த உலகம் நினைக்கும்.