ஆரி தனது தவறை ஒப்புக் கொள்வதில்லை என ரியோ சுமத்திய குற்றச்சாட்டுக்கு நெட்டிசன்கள் குறும்படம் ஒன்றை தயார் செய்து வெளியிட்டுள்ளனர்.
பிக்பாஸ் நான்காவது சீசனில் பாலா மற்றும் ஆரி இடையே அடிக்கடி சண்டைகள் நடந்து வருகின்றது. இதே போன்று நேற்று முன்தினமும் இருவரிடையே ஒருபுறம் சண்டை ஏற்பட்டு இருந்தாலும் மற்றொருபுறம் ரியோவும் ஆரியை டார்கெட் செய்துள்ளார். இந்த வாரத்திற்கான Best Performer தேர்வு செய்ய பிக்பாஸ் கூறியபோது ரியோ ஆரி மற்றும் பாலாஜியை விரைந்து வந்து நாமினேட் செய்தார். அப்போது ரியோ கூறியது “மற்றவர்கள் மீது உள்ள குறையை ஆரி கூறுகிறார். ஆனால் தன் மீது சுமத்தப்படும் புகார்களை அவர் ஒருபோதும் எடுத்துக் கொள்ளவில்லை.”
அதுமட்டுமில்லாமல் தனியாக பேசும் போதும் நான் சொல்லும் ஒரு விஷயத்தையும் நீங்கள் ஏற்றுக் கொள்வதில்லை என ரியோ கடுமையாகக் ஆரியிடம் கூறினார். இந்நிலையில் தற்போது ரியோவின் இச்செயலுக்கு நெட்டிசன்கள் ஆரி தனது தவறை ஏற்றுக் கொண்டு மன்னிப்பு கேட்ட சில காட்சிகளை குறும்படமாக தயார் செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
https://twitter.com/i/status/1345370890314235909