தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் வேலையாக முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி இறையன்பு வை தலைமைச் செயலாளராக நியமித்தார். முதல்வரின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களிலும் இறையன்புவின் மேற்பார்வை இன்றி கோப்புகள் நகர்வதில்லை என கூறப்படுகிறது. தமிழக மக்களின் நலனுக்காக முதல்வர் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்தத் திட்டங்களின் தற்போதைய நிலைமை குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு அடிக்கடி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இவ்வாறான ஆலோசனைகளின் போது துறை ரீதியாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து இறையன்பு அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்வாராம். அப்போது மக்கள் நலத்திட்டங்களில் மக்களுக்காக அளிக்கப்படும் உதவிகள் அனைத்தும் எந்த தங்கு தடையும் இன்றி நேரடியாக மக்களை சென்றடைய வேண்டும் என இறையன்பு வலியுறுத்தியுள்ளார் எனவும் கூறப்படுகிறது. அதோடு திட்டங்களின் தற்போதைய நிலைமை குறித்து அடிக்கடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என இறையன்பு அதிகாரிகளை வலியுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.