தெலுங்கு திரைப்பட உலகில் கீதா கோவிந்தன் என்ற திரைப்படத்தின் மூலமாக ராஷ்மிகா மந்தனா அறிமுகமானார். இவருக்கு தொடர்ந்து பல்வேறு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த இவர் தமிழில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
மேலும் தளபதி விஜய்யுடன் ஜோடியாக விரைவில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இந்த வீட்டின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் புதிய வீடு வாங்கிய அவருக்கு சமூக வலைத்தளங்களில் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.