Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை நடுகடலில் சிறைபிடித்த இலங்கை கடற்படையினர்!!

 ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி  நடுக்கடலில்  இலங்கை கடற்படையினர்  சிறைபிடித்தனர் .

துரைசிங்கம் என்பவருக்கு உரிமையான  படகில் நாகராஜ், பெனடிக்ட், இன்னாசி உள்ளிட்ட ஏழு பேர் நெடுந்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டு  இருந்தனர்.அப்போது எதிர்பாரத விதமாக படகு எந்திரகோளாறு ஏற்பட்டு திசை மாறி செல்ல, அங்கு  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த  இலங்கை  கடற்படையினர்  7 மீனவர்களையும் எல்லை தாண்டிமீன்பிடித்ததாக கூறி படகுடன் சிறைபிடித்தனர்.

பின்னர்  தலைமன்னார் கடற்படை  முகாமுக்கு கொண்டு செல்லபட்ட  மீனவர்கள்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கபட உள்ளனர்.முன்பு ஒருமுறை இதே  படகு இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு நல்லிணக்க அடிப்படியில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |