எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக 7 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த 29-ம் தேதி முதல் இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி 3 முறை கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து 2 விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் எல்லைத்தாண்டிய குற்றத்திற்காக இலங்கையில் ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேருக்கும் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்த மீனவர்களை ஏப்ரல் 12-ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாளை போராட்டம் நடத்த இருப்பதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.