அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் பணிகள் சிறப்பாக முடிய இளைஞர் ஒருவர் ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்திக்கு ஓட்ட பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் நரேந்திரசிங் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கார் மூலம் ராமேஸ்வரம் வந்த நரேந்திரசிங் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் சிறப்பாக கட்டி முடிக்க வேண்டும் என்றும் உலகத்தின் நன்மைக்காகவும் ராமேஸ்வரம் கோவிலில் இருந்து அயோத்தி வரை ஓட்ட பயணம் மேற்கொள்வதாக கூறியுள்ளார். அதன்படி நேற்று காலை ராமேஸ்வரம் கோவிலின் மேற்கு வாசலில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது அயோத்தியில் ராமருக்காக கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் பணிகள் சிறப்பாக நடக்க வேண்டும் என்றும், உலக மக்களின் நலனுக்காகவும் இந்த ஓட்ட பயணம் செல்ல முடிவு எடுத்ததாக கூறியுள்ளார். மேலும் இந்த ஓட்ட பயணம் ராமேஸ்வரத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியாக அயோத்திக்கு செல்வதாக கூறியுள்ளார். இந்நிலையில் 2,912 கிலோமீட்டர் உள்ள இந்த பயணத்தை 55 நாட்களுக்குள் முடித்து கின்னஸ் சாதனை செய்ய முயற்சி செய்வதாகவும் நரேந்திரசிங் தெரிவித்துள்ளார்.