Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ராமாயண கதையில் சீதையாக நடிக்கும் பிரபல நடிகை… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

ராமாயண கதையில் நடிகை கங்கனா ரனாவத் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

தமிழ் திரையுலகில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான தாம் தூம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கங்கனா ரனாவத். தற்போது இவர் ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேலும் இவர் பெண்களை மையமாக வைத்து உருவாகும் படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள தலைவி படத்தில் கங்கனா ரனாவத் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அரவிந்த்சாமி, நாசர், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

சமீபத்தில் தியேட்டர்களில் ரிலீஸான இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் கங்கனா ரனாவத் அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ‘சீதா’  என்ற ராமாயணக் கதையில் கங்கனா ரனாவத் சீதையாக நடிக்க இருக்கிறார். அலாவிக் தேசாய் இயக்கும் இந்த படத்தை எஸ்.எஸ் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த படம் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகவுள்ளது.

Categories

Tech |