Categories
தேசிய செய்திகள்

ராமர் கோவில் பூமி பூஜை…. “கொரோனா அச்சம்” 175 பிரமுகர்கள் மட்டுமே அழைப்பு….!!

ராமர் கோவில் பூமி பூஜை நாளை நடக்க உள்ள நிலையில் 175 பிரமுகர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என ராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை  விழா நாளை நடக்க இருக்கிறது. அந்த விழாவில் கலந்து சிறப்பிக்கும் பிரதமர் நரேந்திர மோடி, கோவில் கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டி வைக்க உள்ளார். மேலும் அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை விழாவுக்கு 175 பிரமுகர்கள் மட்டுமே பங்கேற்க  அழைக்கப்பட்டுள்ளதாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை அறிவித்துள்ளது. இது பற்றி, ராமஜென்ம பூமி அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக 175 பிரமுகர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
90 வயதை கடந்த பிரமுகர்கள், அயோத்தியை அடைவது சாத்தியம் இல்லை. சதுர்மாக்கள், முனிவர்கள், சங்கராச்சாரியார், துறவிகள் ராமர் கோவில் கட்டுமானத்தில் பங்கேற்க மாட்டார்கள்” என தெரிவித்துள்ளது.
அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நடைபெற நாடு முழுவதிலும் இருந்து சுமார் 2,000 ஆலயங்களின் புனித மண் மற்றும் 100 நதிகளின் புனித நீரும் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |