Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“ராப்பூசலில் சிறப்பாக நடந்த ஜல்லிக்கட்டு”…940 காளைகள், 160 வீரர்கள் பங்கேற்பு…!!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ராப்பூசலில் சிறப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைப்பெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலுப்பூர் அருகே ராப்பூசல் முனி ஆண்டவர் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகின்ற நிலையில் இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. நேற்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கிய நிலையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ., கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டில் திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, கரூர், சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 940 காளைகள் மற்றும் 160 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

ஜல்லிக்கட்டு தொடங்க சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு அடக்கினார்கள். இதில் பெரும்பாலான காளைகளை வீரர்களால் அடக்க முடியவில்லை. சில காளைகள் வீரர்களை தூக்கி வீசியது. இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 40 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ சிகிச்சை குழுவினர் சிகிச்சை அளித்த நிலையில் 11 பேருக்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும் வீரர்களால் அடக்க முடியாத காளைகளுக்கும் சைக்கிள், தங்கம், வெள்ளி நாணயம், டிவி, கட்டில், மெத்தை, நாற்காலிகள், குடம், டேபிள் ஃபேன், மின்விசிறி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது.

Categories

Tech |