Categories
தேசிய செய்திகள்

ராணுவ வீரர்கள் தூய குடிநீரை பெற…. இந்திய ராணுவம் செய்யும் செயல்…. அதிகாரி தகவல்….!!!!

எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் சீனா மேற்கொள்ளும் கட்டுமானத்துக்கு பதிலடியாக, கிழக்கு லடாக்பிரிவில் இந்தியா உள் கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறது. லடாக்கில் சென்ற 2020ம் வருடம் மேமாதம் மோதலில் ஈடுபட்ட பிறகு, எல்லையில் இந்திய ராணுவமானது பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கிழக்கு லடாக்கில் சீன அபகரிப்பை சமாளிப்பதற்கு இந்தியா 50,000-க்கும் அதிகமான படைகளை நிலைநிறுத்தியுள்ளது. மேலும் அதிக எண்ணிக்கையிலான புது உபகரணங்களையும் நிறுத்தி இருக்கிறது.

ராணுவ வீரர்கள் தூய குடிநீரைப் பெற, இந்திய ராணுவம் பெரும்பாலான குளங்களை உருவாக்கி வருகிறது. இதன் வாயிலாக கடும் பனிக் காலத்திலும் குடிநீரைப் பெறமுடியும். இது தொடர்பாக இந்திய ராணுவத்தின் தலைமைப் பொறியாளர் லெப்டினன்ட் ஜெனரல் ஹர்பால் சிங் கூறியிருப்பதாவது “ராணுவ வீரர்கள் இந்த வருடம் உறைபனி குளிர்காலங்களில் கூட இந்த குளங்களிலிருந்து சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்தினர். கடும் குளிர் காலத்தில் மேற்பரப்பு மட்டத்திலுள்ள நீர் உறைந்து விடும் ஆனால் கீழே, அது திரவ வடிவில் உள்ளது.

நம் படையினர் தமது தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்காக இக்குளங்களின் நீரை பயன்படுத்தினர். லடாக்கின் மிகவும் குளிரான இடங்களில் தவுலத்பெக் ஓல்டி(டிபிஓ) ஒன்றாகும். இது குளிர்ந்த பாலைவன பகுதி ஆகும். இப்பகுதிகளில் வெப்ப நிலை மைனஸ் 40 டிகிரிக்கு கீழே செல்கிறது. இந்நிலையில் படையினருக்கு தண்ணீர் மற்றும் உணவு வழங்குவது சவாலாக இருக்கிறது. இதை சமாளித்து ராணுவ வீரர்கள் பயன்பெறும் அடிப்படையில், நம் பொறியாளர்கள் குழு விரிவான பணிகளை செய்துள்ளது” என்று கூறினார்..

Categories

Tech |