எல்லை பாதுகாப்பு படையினர் பயன்படுத்தி வந்த ஒட்டகம் ராணுவ வீரரை தாக்கியதால் அதை சுட்டுக் கொன்றனர்.
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பகுதியில் எல்லைப் பாதுகாப்பு படையினர் ஒட்டகத்தை பயன்படுத்தி வருகின்றனர். அங்கிருந்து ராணுவ வீரர் அமித் என்பவரை ஒரு ஒட்டகம் பலமாக தாக்கியது . இதை பார்த்த சக வீரர்கள் அவரை காப்பாற்றி அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளது.
அவருக்கு முதுகு, கையில் பலத்த காயம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ராணுவத்தினரை தாக்கிய ஒட்டகத்தை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். ரோந்து பணியில் இருக்கும் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கும்படி ராணுவம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.