ராணுவ வீரர் ஒருவரின் காலைத் தொட்டு வணங்கி குழந்தை ஒன்று சல்யூட் வைக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ராணுவ வீரர்கள் சிலர் நின்று கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வந்த இரண்டரை வயது குழந்தை ஒன்று இராணுவ வீரரின் அருகில் சென்று அவரைப் பார்த்து சிரிக்கிறது.
உடனே அந்த குழந்தை அவரின் காலில் விழுந்து தொட்டு வணங்குகிறது. அப்போது அந்த ராணுவ வீரர் குழந்தையை தொட்டு மகிழ்ச்சி தெரிவிக்கிறார். இதனைப் பார்த்த மற்ற ராணுவ வீரர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி குழந்தைக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
This is what we should teach our next generation ❤️ pic.twitter.com/hFYBVOPGwq
— Vijay Kumar 🇮🇳 (@vi_jaykumar) July 15, 2022