இந்தியாவில் வருடம் தோறும் ராணுவ உயர் அதிகாரிகள் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் மாதத்தில் நடத்தப்படும். அதன்படி நடப்பாண்டில் நடத்தப்பட்ட பணியாளர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர் பணிகளுக்காக நடத்தப்பட்ட தேர்வுகளில் முதல் முறையாக 6 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் 4 பேர் குன்னூரில் அமைந்துள்ள வெலிங்டன் ராணுவ கல்லூரியில் ஒரு வருடம் மேற்படிப்பு படிக்க இருக்கின்றனர். இவர்கள் முப்படை ராணுவ வீரர்களுடன் சேர்ந்து படிக்க இருக்கும் நிலையில், ராணுவ நுண்ணறிவு உட்பட பல்வேறு பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. இதன் மூலம் ராணுவத்தின் உயர் அதிகாரிகள் பணியில் அவர்கள் நியமிக்கப் படுவார்கள்.
இந்நிலையில் தேர்வில் தேர்ச்சி பெற்ற 4 பெண்களில் ஒரு பெண்ணின் கணவரும் தேர்ச்சி பெற்றதால் முதல்முறையாக கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து ராணுவ கல்லூரியில் இணைந்து பயிற்சி பெற இருக்கின்றனர். இதனையடுத்து தேர்ச்சி பெற்ற 6 பெண்களில் ஒருவர் தொழில்நுட்ப பணியாளர் பிரிவில் இருப்பு பட்டியலில் இருக்கிறார் என்றும், மற்றொருவர் ராணுவ பணி நியமனங்களுக்கான நிர்வாகப் பொறுப்பு குறித்த பயிற்சியில் ஈடுபடவுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் பணியாளர் படிப்பு மற்றும் தொழில்நுட்ப படிப்புக்கான நுழைவுத் தேர்வை 1500-க்கும் மேற்பட்டோர் எழுதினார். இதில் பல்வேறு பிரிவுகளில் இருந்து முதல் முறையாக 22 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது பாராட்டுக்குரிய விஷயம் ஆகும்.