Categories
தேசிய செய்திகள்

ராணுவத்தில் ஆள் சேர்க்கும் அக்னிபத் திட்டம்….. திடீரென வெடித்த கலவரம்…. ரயில்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டதால் பரபரப்பு….!!!

ரயில்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் அக்னிபத் எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த திட்டமானது ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தில் 17 வயது முதல்
21 வயது வரை உள்ள ஆண், பெண் என இருபாலரும் சேர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ராணுவ வீரர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற நியமிக்கப்படுவார்கள். இந்த ஆண்டில் 46 ஆயிரம் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவார்கள்.

இந்நிலையில் 4 வருடங்களுக்கு மட்டுமே ராணுவத்தில் பணியாற்ற படுவார்கள் என்று கூறியதால் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் குறிப்பாக பீகார் மாநிலத்திலுள்ள  முர்சாஃபூர், பாட்னா உள்ளிட்ட  பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டக்காரர்கள் சாலையில் டயர்களை எரித்தும், பேருந்துகளை கல்வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆனால் திடீரென ரயில்களின் மீது கல்வீசி ரயில்களுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காவல் துறையில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போராட்டக்காரர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |