வடகொரிய ராணுவத்தின் 90ஆவது தொடக்க ஆண்டை முன்னிட்டு ராணுவ கல்லறையில் அந்நாட்டு அதிபர் மரியாதை செலுத்தியுள்ளார்.
வட கொரியா நாட்டின் ராணுவத்தின் 90ஆவது தொடக்க ஆண்டை முன்னிட்டு அந்நாட்டு அதிபரான கிம் ஜாங் உன் ராணுவ கல்லறைக்கு சென்று மலர் வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். இதனையடுத்து வடகொரியாவில் உள்ளூர் செய்தியாளர் வெளியிட்ட வீடியோவில் ராணுவ அதிகாரிகள் அனைவரும் வந்து கிம் ஜாங் உன் அவர்களுக்கு பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு மரியாதையை செலுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இந்த அணிவகுப்பில் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளும் இடம்பெற்றிருந்தது. மேலும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்றும் இதற்கு துரித நடவடிக்கை எடுக்க வடகொரியா திட்டமிட்டுள்ளதாகவும் அந்நாட்டின் பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.