ராஜஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் சிகார் நகரத்தில் இருந்து புது டெல்லிக்கு சுமார் 350 கிலோ மீட்டர் ஓடி வந்துள்ளார். இந்த இளைஞன் இந்த கோர பயணத்தை முடித்து அதன் பின்னணியில் உள்ள காரணம் ஒன்று தான். அது இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்பது. ராஜஸ்தானை சேர்ந்த சுரேஷ் பிச்சார் என்பவர் சிகார் பகுதியிலிருந்து புதுடெல்லி வரை மொத்தம் 50 மணி நேரத்தில் 350 கிலோ மீட்டர் தூரத்தை ஓடி முடித்து உள்ளார்.இந்திய ராணுவத்தின் ஆட்சேர்ப்பு செயல்முறை தாமதத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் இவ்வளவு தூரம் ஓடி வந்துள்ளார்.
ஆட்சேர்ப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டதை கண்டித்து இராணுவ ஆய்வாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள அந்த இளைஞர் ஓடி வந்துள்ளார். மேலும் அவருக்கு இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. ஆனால் கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக பணியமர்த்தபடவில்லை. இளைஞர்களின் உற்சாகத்தை அதிகரிக்க டெல்லிக்கு ஓடி வந்தேன் என்று அவர் கூறியுள்ளார்.