மியான்மரில் ராணுவத்திற்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில் நேற்று 38 பேர் போராட்டத்தினால் கொல்லப்பட்டுள்ளனர்.
மியான்மர் தற்போது இராணுவத்தின் பிடியில் உள்ளது.கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் ஆளும் கட்சியான தேசிய ஜனநாயக லீக் அரசிடமிருந்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அதனால் மியான்மர் தலைவரான ஆங் சாங் சூகி இராணுவத்தால் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் உள்ளார். இதனால் அந்நாட்டில் மக்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு மற்றும் அனுமதி இன்றி விமானங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில நேரங்களில் இணைய சேவைகளும் தடை செய்யப்பட்டுள்ளது. ராணுவத்தின் இந்த போராட்டத்தினால் பல நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு பிப்ரவரி 28 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் 18 பேர் கொல்லப்பட்டு,30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்றுபோராட்டத்தால் மேலும் 38 பேர் இறந்துள்ளனர். ஏற்கனவே பாகோ பகுதியில் ஒரு பெண் உள்பட 19 பேர் கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் என்னும் ஒரு வக்கீல் குழுவின் கூற்றுப்படி, இராணுவத்தின் இந்த ஒடுக்குமுறையால் குறைந்தது 126 பேராவது கொல்லப்பட்டனர்.கடந்த மார்ச் 1-ஆம் தேதி நிலவரப்படி ராணுவ சதித்திட்டம் தொடர்பாக 2,156 பேர் கைது செய்யப்பட்டும் ,தண்டிக்கவோ அல்லது குற்றம்சாட்டப்படவோ உள்ளனர் .மேலும் மொத்தம் 1,837 பேர் இன்னும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது .