Categories
மாநில செய்திகள்

ராணிப்பேட்டை: திமுக-அதிமுகவினர் இடையே மோதல்…. பரபரப்பு…..!!!!

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை,நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் இன்றும் 9ஆம் தேதியும் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 14,662 இடங்களுக்கு இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஒவ்வொரு வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகள், வாக்கு சீட்டுகள், அழியாத மை ஆகியவை வாகனங்கள் மூலம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும். மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஒரு மணி நேரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், அதற்கான அறிகுறி உள்ளவர்கள் வாக்களிக்கலாம்.

இந்நிலையில் ராணிப்பேட்டையில் திமுக – அதிமுக இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ராணிப்பேட்டை சிப்காட் வ.உ.சி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக – அதிமுக இடையே மோதல். வாக்குச்சாவடிக்கு அருகே அதிமுகவினர் பேனர் வைத்ததாக கூறி இருதரப்புக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. அதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

Categories

Tech |