Categories
சினிமா

ராஜ்குந்த்ராவிற்கு வலுக்கும் சிக்கல்…. ஆபாச பட வழக்கில் மேலும் 4 பேர் கைது… போலீசார் அதிரடி…!!!!

ஆபாச வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜ்குந்த்ராவை தொடர்ந்து மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஷில்பா ஷெட்டி. இவரின் கணவர் ராஜ் குந்த்ரா. இவர் அண்மையில் ஆபாச படங்களை தயாரித்து கோடிக்கணக்கில் விற்றதாக கைது செய்யப்பட்டார். மேலும் நடிகைகள் பலரும் இவரின் மேல் வழக்கு தொடர்ந்தனர். இதனால் ராஜ் குந்த்ராவின் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து இவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை செய்தபோது ஆபாச வீடியோ சிடி, ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட ராஜ் குந்த்ரா சில நாட்கள் சிறையில் இருந்தார். பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். தற்போது மேலும் 4 பேர் ஆபாச பட வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மும்பை குற்றப்பிரிவு போலீசார் விசாரணையின் போது இவர்கள் நான்கு பேரும் மும்பையில் உள்ள வொர்ஸோவா மற்றும் பொரிவளி பகுதியைச் சேர்ந்தவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நான்கு பேரை கைது செய்ததனால் ராஜ்குந்த்ராவுக்கு பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |