ராஜு வீட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் ஜெயம் ரவி பங்கேற்கும் புரோமோ வைரலாகி வருகின்றது.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் புத்தம் புதிய நிகழ்ச்சியான ராஜு வீட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது. சென்ற ஜூன் மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் பிக்பாக்ஸ் வின்னர் ராஜூவை முன்னிலைப்படுத்தி ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் பிரியங்கா, ராமர், சுனிதா, மதுரை முத்து உள்ளிடோரும் கலக்கி வருகின்றார்கள்.
இந்த நிகழ்ச்சியானது வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும். இந்த நிலையில் நிகழ்ச்சியில் இந்த வாரம் சிறப்பு விருந்தினராக ஜெயம் ரவி பங்கேற்றுள்ளார். ஜெயம் ரவியிடம் ராஜு வீட்டின் குழுவினர் கலகலப்பாக பேசும் ப்ரோமோ வீடியோ வெளியாகியிருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் ஜெயம் ரவி பங்கேற்று இருப்பதால் இந்த வார நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.