பஞ்சாப் மாநிலத்தில் அமரிந்தர் சிங் முதல்வர் பதவியிலிருந்து விலகியதால் புதிய முதல்வராக சரன்ஜித் சிங் சன்னி காங்கிரசால் தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து புதிய மந்திரி சபையில் இலாகா ஒதுக்கீடு குறித்து பஞ்சப் காங்கிரஸ் தலைவர் சித்துக்கும் முதல்வருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சித்து காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகப் போவதாக கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி அதிரடியாக அறிவித்தார்.
ஆனால் இந்த ராஜினாமாவை காங்கிரஸ் மேலிடம் ஏற்காமல் தொடர்ந்து காங்கிரஸ் தலைவராக சித்து தான் நீடிப்பார் என்று கூறியிருந்தது. இந்நிலையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பொறுப்பை திரும்பப் பெறுவதாக சித்து நேற்று அறிவித்துள்ளார். இதுகுறித்து சித்து கூறியது, “எனது ராஜினாமா கடிதத்தை நான் திரும்ப பெற உள்ளேன். மேலும் புதிய அட்வகேட் ஜெனரல் நியமிக்கப்படும் நாளில் புதிய குழுவும் அமைக்கப்படும் என்று கூறினார். இதனை தொடர்ந்து எனது பொறுப்பை நான் ஏற்கிறேன் என்றும் எனக்கு தனிப்பட்ட ஈகோ எதுவும் கிடையாது” என்று கூறினார்.