Categories
சினிமா தமிழ் சினிமா

“ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகியதற்கு இதுதான் காரணமா….?” விஜே அர்ச்சனா ஓபன் டாக்…!!!!

ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகியதற்கான காரணம் குறித்து அர்ச்சனா கூறியுள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 தொடரில் அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடித்த வருகின்றார் விஜே.அர்ச்சனா. இதில் இவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் சீரியல் மட்டுமல்லாமல் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கின்றார். தற்பொழுது முரட்டு சிங்கிள், கலக்கல் ராஜா, கில்லாடி ராணி உள்ளிட்ட நிகழ்ச்சியில் கலக்கி வருகின்றார்.

இந்த நிலையில் பிக் பாக்ஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் விரைவில் தொடங்க உள்ளதால் இவர் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகுவதாக இணையத்தில் செய்தி பரவி வருகின்றது. இந்தநிலையில்  அர்ச்சனா எனது வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடிவு செய்து இருப்பதால் விலகினேன். நான் பிக்பாக்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உண்மையா? இல்லையா” என்பது இனிவரும் நாட்களில் தெரியும். பொறுத்திருந்து பாருங்கள் என கூறியிருக்கின்றார்.

Categories

Tech |