ராஜஸ்தான் மாநிலத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் நகாவுர் பகுதியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென்று லாரி மீது மோதியது. இதில் காரில் இருந்த 11 பேர் உயிரிழந்தனர். இதுதவிர ஏழு பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து பற்றி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Categories
ராஜஸ்தானில் லாரி மீது கார் மோதல்… 11 பேர் பலி…!!!
