இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ஆர் ஆர்’ ஆர் படத்தின் அட்டகாசமான போஸ்டர் வெளியாகியுள்ளது.
பாகுபலி படத்தின் மூலம் பிரபலமடைந்த இயக்குநர் எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘ஆர் ஆர் ஆர்’. இந்த படத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை லைக்கா நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படம் வருகிற அக்டோபர் 13ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது . தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் ராஜமௌலி ஆர் ஆர் ஆர் படத்தின் அட்டகாசமான போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் அல்லுரி சீதாராம ராஜுவாக நடித்துள்ள ராம்சரண் தேஜா வானத்தை நோக்கி வில்லால் அம்பு விடுவது போன்று போஸ் கொடுத்துள்ள இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.