ஆர் ஆர் ஆர் படக்குழுவினருடன் நடிகர் ராம் சரண் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் .
இயக்குனர் எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘ஆர் ஆர் ஆர்’. இந்த படத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் வருகிற அக்டோபர் 13ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது .
Had a blast celebrating our RAMA RAJU’s birthday on the sets last night…:)
Wishing you a BLOCKBUSTERRR YEAR ahead. @alwaysramcharan 🔥❤️ #HBDRamCharan #AlluriSitaRamaRaju pic.twitter.com/2xX4zp9fjo
— RRR Movie (@RRRMovie) March 27, 2021
தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடிகர் ராம்சரணின் பிறந்த நாளை முன்னிட்டு ‘ஆர் ஆர் ஆர்’ படத்தின் ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ராம் சரண் தனது பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.