பிரபல பாலிவுட் நடிகையான வித்யா பாலன் ராசியில்லாத நடிகை என தமிழ் மற்றும் மலையாளத்தில் நீக்கப்பட்டதாக ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தும், தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார் வித்யாபாலன். ஆனால் அவரை ராசி இல்லாதவர் என ஒதுக்கி விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ” நான் முதல் முதலில் மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்தேன். அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே எனக்கு 8 படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சில காரணத்தினால் மோகன்லால் படம் பத்தியில் நின்றது. இதனால் என்னை புது படங்களில் ஒப்பந்தம் செய்திருந்தவர்கள் ராசியில்லாத நடிகை என ஒதுக்கினர்.
எனக்கு பதிலாக வேறு நடிகைகளை நடிக்க வைத்தனர். அதன் பின் தமிழில் ஒப்பந்தமான படங்களில் இருந்தும் நீக்கிவிட்டனர். இதனால் மிகவும் மனமுடைந்து போனேன். ஆத்திரம் வந்தது. யாருமே எனக்கு உதவவில்லை. தியானம், பிரார்த்தனை மூலமாக இதிலிருந்து மீள முயற்சித்தேன். “பரீனிதா” என்ற இந்தி படத்தில் நடித்ததன் பின்புதான் என் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது.” என்று நடிகை வித்யாபாலன் கூறியுள்ளார்.