ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
நெல்லையை சேர்ந்த சாமிதுரை என்பவர் கொலை வழக்கில் கடந்த 7ஆம் தேதி திருவனந்தபுரத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார் பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜா. வெளிநாடு தப்பிச்செல்ல முயன்ற ராக்கெட் ராஜாவை கைது செய்த போலீசார் திருநெல்வேலிக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.. பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜா மீது ஐந்து கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ராக்கெட் ராஜா மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்..