Categories
ஆன்மிகம் இந்து

ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கேற்றி…. வழிபாடு செய்யுங்கள்… தடைகள் நீங்கி செல்வம் பெருகும்..!!

எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றினால் என்னென்ன நன்மைகள் நடக்கும் என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.

எலுமிச்சை பழங்களை தேவ கனி என்று அழைப்பார்கள். தீராத சங்கடங்களை போக்க எலுமிச்சம் பழத்தை வைத்து வழிபாடு செய்வார்கள். இது  தீய ஆவிகளை நீக்க பயன்படுகிறது . எலுமிச்சையை திரிசூலம், மூர்த்திகள், யாக குண்டம் மற்றும் கதவின் இருபுறங்களிலும் எலுமிச்சையை வைக்கின்றோம் .கண் திருஷ்டியை நீக்கி நன்மையை அளிக்க இவ்வாறு செய்கிறோம்.

நோய்களால் அதிகம் அவஸ்தைப்படுபவர்கள் அது விரைவில் குணமாக ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்பத்தில் பிரச்சினை அதிகம் இருந்தால் செவ்வாய்க்கிழமை அன்று ராகு காலத்திலும், குடும்ப மற்றும் தனிப்பட்ட வேறு வேண்டுதலுக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும் 2 எலுமிச்சை விளக்கேற்றி அம்மனை மனம் உருக வேண்டினால் பிரச்சினை அனைத்தும் நீங்கி சந்தோஷம் இருக்கும்.

எலுமிச்சை விளக்கு ஏற்றும் முறை:

துர்க்கையின் சன்னதியில் ஒரு எலுமிச்சை பழத்தினை இரண்டாக நறுக்கி சாறுபிழிந்து விளக்கு போல் திருப்பி நெய் ஊற்றி அதன் பின்னே ஐந்து நிலைகள் கொண்ட நூல் திரி கொண்டு அதன் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து விளக்கு ஏற்றவேண்டும். அடுத்தவர்  விளக்கு ஏற்றியதில் நீங்கள் ஏற்றக்கூடாது. ஜோடியாகத்தான் ஏற்றவேண்டும். தீப ஒளி அம்மனை நோக்கியவாறு இருக்க வேண்டும். விளக்கு ஏற்றிய பின்னர் மூன்று சுற்றுகள் வலம் வந்து கடவுளை வேண்ட வேண்டும். பின்னர் 20 நிமிடங்கள் அமர்ந்து இருந்து துர்க்கை பாடல் சொல்லி மனமுருகி வேண்ட வேண்டும். 21வது நிமிடம் கோயிலை விட்டு வெளியேறி விடவேண்டும். ராகுவால் உண்டான கஷ்டத்தை நிவர்த்தி செய்ய இது உங்களுக்கு உதவும்.

Categories

Tech |