சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவர் கோபண்ணா எழுதிய “மாமனிதர் நேரு” நூல் வெளியீட்டு விழாவானது நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று நூலினை வெளியிட்டார்.
இதையடுத்து முதல்வர் பேசியதாவது “ராகுல்காந்தி பாத யாத்திரை வாயிலாக இந்தியாவில் பூகம்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் ராகுல் பேசுவது நேரு பேசுவது போன்று இருக்கிறது. கோட்சேவின் வாரிசுகளுக்கு காந்தி,நேரு வாரிசுகளின் பேச்சானது எரிச்சலை ஏற்படுத்த தான் செய்யும்” என அவர் தெரிவித்தார்.