Categories
தேசிய செய்திகள்

ராகுல் காந்தி நடைப்பயணத்தில்…. மயங்கி விழுந்த காங்கிரஸ் மூத்த தலைவர்…. நொடியில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!!

ராகுல்காந்தி தலைமையில் கன்னியாகுமரி -காஷ்மீர் வரை 150 நாட்கள் “பாரத் ஜோடோ” நடைப்பயணம் திட்டமிடப்பட்டு நடந்து வருகிறது. தமிழகம், கேரளம், கர்நடாகா, ஆந்திரம், தெலங்கானாவை கடந்து மகாராஷ்டிரத்திற்குள் நேற்றிரவு நடைப்பயணம் நுழைந்தது. அவ்வாறு ஒவ்வொரு மாநிலத்தில் நுழையும்போதும் அந்தந்த மாநிலங்களின் மூத்ததலைவர்கள் நடைப் பயணத்தில் பங்கேற்பார்கள்.

அந்த வகையில் இன்று காலை காங்கிரஸ் சேவா தளத்தின் பொதுச்செயலாளரும், மூத்ததலைவருமான கிருஷ்ண குமார் பாண்டே(75) நடைப்பயணத்தில் பங்கேற்றார். தேசியக் கொடியை ஏந்தியபடி நடந்து சென்று கொண்டிருந்தபோது கிருஷ்ண குமார் பாண்டேவுக்கு மயக்கம் ஏற்பட்டதை அடுத்து அருகில் இருந்தவரிடம் தேசியக்கொடியை கொடுத்துவிட்டு கீழே விழுந்துள்ளார்.

உடனே அவரை மீட்ட நடைப்பயணக் குழுவினர் ஆம்புலன்ஸ் வாயிலாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் கிருஷ்ண குமார் பாண்டேவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கிருஷ்ண குமார் பாண்டேவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Categories

Tech |