புதுச்சேரி வளர்ச்சிக்காக மத்திய அரசு வழங்கிய 15,000 கோடி ரூபாயை நாராயணசாமி பொதுமக்களுக்காக செலவிடவில்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய திரு அமித் ஷா, புதுச்சேரி மாநிலத்திற்கு 114 திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்ததாகவும், ஆனால் நல்ல திட்டங்களை வர விடாமல் தடுத்தது அப்போதைய நாராயணசாமி அரசுதான் என்றும் குற்றம் சாட்டினார். ராகுல் காந்தியிடம் பொய் கூறிய நாராயணசாமி பொதுமக்களிடம் எப்படி உண்மையாக இருப்பார் என்றும் திரு அமித்ஷா கேள்வி எழுப்பினார். பட்டியல் இன மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியையும் நாராயணசாமி விட்டு வைக்கவில்லை என்றும் திரு அமித்ஷா தெரிவித்தார்.