சமீபகாலமாக ட்விட்டர் தங்களது விதிமுறைகளை மீறுபவர்களின் கணக்கை முடக்கி வருகின்றது. அந்த வகையில் கட்சி தலைவர்கள் பலரின் கணக்குகள் முடக்கப்பட்டு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளது. அதுமட்டுமில்லாமல் ட்விட்டரில் ப்ளூ டிக் ஒன்று வழங்கப்படும். அந்த ப்ளூ டிக்கும் அவ்வப்போது நீக்கப்பட்டு, மீண்டும் கொடுக்கப்பட்டதாகவும் ட்விட்டர் மீது பலரும் குற்றம் சாட்டி வந்தனர்.
இதற்கிடையில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல்காந்தியின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்ட நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கம், ராகுல்காந்தி உள்ளிட்ட 5 முக்கிய தலைவர்களின் டிவிட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி.கள், செய்தி தொடர்பாளர் உள்பட 5,000 பேரின் டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அழுத்தத்துக்கு அடிபணிந்து 50,000 டிவிட்டர் கணக்குகளை முடக்கியுள்ளதாக காங்கிரஸ் சமூக ஊடகப்பிரிவு தலைவர் ரோகன் குப்தா புகார் தெரித்துள்ளார்.