ராகிங் குறித்து புகார் வந்தால் அதன் மீது காலதாமதமாக வழக்கு பதிவு செய்யும் பொழுது காவல்துறையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார் இது குறித்து அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், ராகிங் சம்பவம் தொடர்பாக புகார்கள் மீது கல்வி நிறுவனத்தினர அலட்சியம் செய்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். மனநல ஆலோசகர் மூலம் மாணவர்களிடையே நம்பிக்கை வளர்க்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் ராகிங் தடுப்பு குழு இருக்க வேண்டும். அதேபோல அதனை கண்காணிக்கவும் ஒரு பிரிவு இயங்க வேண்டும். மாணவர்கள் இனி ராகிங்கில் ஈடுபடவோ அல்லது துணை புரியவோ மாட்டோம் என்று உறுதிமொழியை ஒவ்வொரு கல்வியாண்டில் தொடக்கத்திலும் எடுக்க செய்ய வேண்டும். கல்லூரி வளாகங்களில் முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். போலீசார் வழக்கு பதிவு செய்வதில் வேண்டுமென்றே தாமதம் செய்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.