நடப்பு கல்வி ஆண்டுக்கான ராகிங் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு யுஜிசி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி ராகெங்கில் ஈடுபடமாட்டேன் என antiragging.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும். ராகிங்கை தடுக்க உயர்கல்வி நிறுவன வளாகங்கள், விடுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும்.
விடுதிகள், பொங்கல் மற்றும் கழிப்பறைகளில் ராகிங் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான போஸ்டர்களை ஒட்ட வேண்டும்.மேலும் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி வளாகங்களின் முக்கிய இடங்களில் எச்சரிக்கை மணியை பொருத்த வேண்டும் எனவும் யுஜிசி நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.